"பறவைகளுக்கு விடுதலை அளிக்கப்படவுள்ளது" - எலான் மஸ்க்
#Twitter
#Social Media
#ElonMusk
Prasu
1 year ago

இன்று இரவு எக்ஸ் சின்னம் (X logo) டுவிட்டருக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "பறவைகளுக்கு விடுதலை அளிக்கவுள்ளதாகவும்,விரைவில் டுவிட்டர் பிராண்டுக்கும், அதன் சின்னத்திற்கும் படிப்படியாக விடை கொடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இன்று இரவு எக்ஸ் சின்னம் (X logo) அறிமுகம் செய்யப்பட்டு, நாளை நாங்கள் உலகம் முழுவதும் அதை நேரலையாக்குவோம் என்று எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னதாக டுவிட்டர் சின்னத்தை மாற்றி அதற்கு பதிலாக டாட்ஜின் (Dodge) சின்னத்தை எலான் மஸ்க் வைத்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




— Elon Musk (@elonmusk) July 23, 2023